செல்வராகவன் அக்காவாக மாறிய கவுசல்யா | திருவண்ணாமலையில் படமாக்கப்பட்ட 'கொலைச் சேவல்' | ஓடிடியில் டாப் 2ல் 'வித் லவ்' | 'துரந்தர் 2' பிரிமியர்: தமிழகத்தில் சிறப்பான முன்பதிவு | எம்ஜிஆர் பற்றி 'கிண்டலாக' பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | மார்ச் 18ல் 'அல்லு சினிமாஸ்' ஆரம்பம் | தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் |

மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் 'லூசிபர்'. இப்படத்தைத் தெலுங்கில் 'காட் பாதர்' என்ற பெயரில் மோகன் ராஜா இயக்க சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்க ரீமேக் செய்து இன்று(அக்.,5) வெளியிட்டுள்ளனர். சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தை அடுத்து, நாகார்ஜூனா நடிக்கும் படத்தை மோகன் ராஜா இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 'காட் பாதர்' படம் துவங்குவதற்கு முன்பே, நாகார்ஜுனாவிடம் அவர் கதை சொன்னதாகவும் அது பிடித்துப் போனதால், அவர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.