அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்களின் மூலம் திறமையான குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டவர் நடிகர் கிஷோர் அதன்பிறகு ஹரிதாஸ், போர்க்களம் உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாகவும் எதார்த்தமான நடிப்பை வழங்கிய கிஷோர், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஒற்றனாக (ஆபத்துதவியாக) வித்தியாசமான தோற்றத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
அதேசமயம் கன்னடத்திலும் இவர் நடித்துள்ள கந்தரா என்கிற படம் அதேநாளில் வெளியாகி வரவேற்பை பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் கிஷோர். இந்த நிலையில் முதன்முறையாக பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ள கிஷோர், சந்திரசேகர் பண்டியப்பா என்பவர் இயக்கும் ரெட் காலர் என்கிற சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கிஷோர் நடிக்கும் காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட இருக்கின்றன.