சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது | ரஜினி, கமல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது | ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு | ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் | பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் | 2026ன் 3வது நேரடி ஓடிடி ரிலீஸ் 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஸ்டார் ஆன சிரஞ்சீவி நடிப்பில் இன்று(அக்., 5) வெளியான தெலுங்குப் படம் 'காட் பாதர்'. ஜெயம் ரவியின் அண்ணனான மோகன்ராஜ இயக்கத்தில் நயன்தாரா, சமுத்திரக்கனி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய 'லூசிபர்' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். சிரஞ்சீவி நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'ஆச்சார்யா' படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதனால், இந்தப் படத்தின் மீது சிரஞ்சீவி மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவரது நம்பிக்கையை இயக்குனர் மோகன்ராஜா, இசையமைப்பாளர் தமன் ஆகியோரும் சேர்ந்து சிறப்பான படமாகக் கொடுத்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரஞ்சீவி ரசிகர்களுக்கும் படம் பிடித்திருப்பதால் படம் வெற்றிப்பட வரிசையில் இணைந்துவிடும் எனச் சொல்கிறார்கள். அதே சமயம் நாகார்ஜுனா நடித்து வெளிவந்துள்ள 'த கோஸ்ட்' படத்திற்கு சுமாரான வரவேற்புதான் கிடைத்துள்ளதாம். மற்றொரு படமான 'ஸ்வாதிமுத்யம்' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்றைய விஜயதசமி வெளியீடு போட்டியில் சிரஞ்சீவிதான் முன்னணியில் உள்ளார்.




