கருப்பு டிரைலர் எப்ப? அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி | கதையின் நாயகன் ஆன ‛மாமன்' இயக்குனர் | கதைநாயகனாகவும் நடிக்கிறேன், காமெடியனாகவும் வருகிறேன் : அப்புக்குட்டி | ஆர்.பி.சவுத்ரிக்கு இரங்கல், விஜய்க்கு ஆதரவு : சரி, கமல் எங்கே? | 25வது நாளில் 66 கோடி வசூலித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மோனிகா' பாடல் | பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐகே' முதல் 'வாழ-2' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ் | அரசியல் பதிவிட்டு விஜய்க்கு ஆதரவு கொடுத்த நடிகர் விஷால் | விஜய்க்கு வாழ்த்து சொல்வதைத் தவிர்த்த சில சினிமா பிரபலங்கள் | ஆர்பி சவுத்ரி ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்? |

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்கத் தொடங்கியபோது ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்க முடியாத அளவுக்கு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டிருந்தனர். அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் மீதான ரெட்கார்ட் தடை நீக்கப்பட்டது. அதையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார் வடிவேலு.
லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் நடித்து முடித்துவிட்ட வடிவேலு தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெறும் நிலையில் வருகிற நவம்பர் மாதம் இப்படம் திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு தியேட்டர் ரிலீஸ்க்கு பிறகு இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.