சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு | என் கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கும் வெற்றி | பொன்னியின் செல்வன் பாடலில் தாகர் குடும்பத்திற்கு கிரெடிட் கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல் | பிளாஷ்பேக் : மோகன்லால் கேரக்டரில் நடித்த பாண்டியராஜன் | பிளாஷ்பேக்: நாடகத்தால் வெற்றி பெற்ற படம் | துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன்… தொடரும் காதல்?? | மார்ச் 6ல் வெளியாகிறது ரச்சிதா நடித்த ஹாரர் படம் |

வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு , தற்போது கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் சிம்பு கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்த சிம்பு, இடையே வெந்து தணிந்தது காடு பட வெளியீட்டிற்காக இடைவெளி விட்டிருந்தார்.
இந்த நிலையில், பத்து தல படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 27ம் தேதி துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நடைபெறவுள்ள இந்த அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சிம்புவுடன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படத்தின் மற்ற நடிகர்களும் பங்கேற்கவுள்ளனர். டிசம்பர் 14ல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் புரமோஷனை அடுத்த மாதம் முதல் படக்குழு துவக்க உள்ளது.




