வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி |

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலரது நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி வெளிவந்த படம் 'லைகர்'. பான் இந்தியா படமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்தது. தெலுங்கிலிருந்து மற்றுமொரு ஹீரோ பான் இந்தியா அந்தஸ்து பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் தோல்வி விஜய் தேவரகொண்டாவின் இமேஜையும் பெரிதும் பாதித்தது.
விமர்சகர்கள், ரசிகர்கள் பலரும் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தான் படத்தோல்விக்குக் காரணம் என விமர்சித்திருந்தார்கள். கதையே இல்லாமல் எப்படி இப்படி ஒரு படத்தை இவ்வளவு செலவு செய்து எடுக்க முடிந்தது என்றும் கேள்வி எழுப்பினார்கள். ஹிந்தியில் வெறும் 20 கோடியை மட்டுமே இந்தப் படம் வசூலித்து கடந்த வாரத்துடன் எஞ்சியிருந்த தியேட்டர் ஓட்டத்தையும் நிறைவு செய்தது.
இந்நிலையில் இப்படம் நாளை செப்டம்பர் 22ம் தேதி முதல் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் நாளை வெளியாகும் என்றும் ஹிந்தியில் பிறகு வெளியாகும் என்றும் தெரிகிறது. தியேட்டர்களில் கிடைக்காத வரவேற்பு ஓடிடியிலாவது கிடைக்குமா ?.




