ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு பின் தனுஷ் நடிப்பில் அடுத்து, ‛நானே வருவேன்' படம் வெளியாக உள்ளது. அண்ணன் செல்வராகவன் இயக்கி உள்ள இந்த படம் இம்மாதம் ரிலீஸாக உள்ளது. அதைத்தொடர்ந்து வாத்தி படமும் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களுக்கு பின் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‛கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிப்பார் என தெரிகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது தனுஷின் ‛நானே வருவேன்' படம் இறுதிக்கட்டத்தில் ரிலீஸ் பரபரப்பில் இருக்கிறது. இதனால் இந்த படத்தை அடுத்தமாதம் துவங்க உள்ளனர். நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலை பிரதேசம் மற்றும் காடுகளில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.




