அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் சமந்தா, கீர்த்தி சுரேஷ். இருவரும் இணைந்து 'மகாநடி' படத்திலும் நடித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் 'மெட்டாலிக் கிரே' கலரில் ஒரு நீள கவுனை அணிந்து போட்டோ ஷுட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். அந்த ஆடையைப் போலவே சமந்தாவும் இதற்கு முன்பு அணிந்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் சமந்தாவின் போட்டோவையும் ரசிகர்கள் பகிர்ந்தார்கள்.
ஒரே விதமான அந்த ஆடையில் யார் அழகாக இருக்கிறார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் சமந்தாவின் அதே ஆடை போட்டோக்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டவை. அதைத் தேடிப் பிடித்து இப்படி ஒரு விவாதம் நடத்தி வருகிறார்கள் ரசிகர்கள்.