ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' | அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! |

இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் கார்த்தி நடித்த விருமன் படத்தில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர். முதல்படம் வெற்றி பெற்றது. அதிதியின் நடிப்பும், நடனமும் வரவேற்பை பெற்றது. அடுத்தப்படியாக சிவகார்த்திகேயன் ஜோடியாக ‛மாவீரன்' படத்தில் நடிக்கிறார். இதை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. சில தினங்களுக்கு முன் அதிதி இந்த படத்தில் இணைந்தார். இந்நிலையில் இந்த படத்தில் இவர் பத்திரிக்கையாளராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மண்டேலா போன்று இந்த படத்திலும் ஒரு சமூகம் சார்ந்த கருத்து உடைய படமாக உருவாக்குகிறாராம் மடோன் அஸ்வின்.