
பவன் கல்யாண் பிறந்தநாள் ஸ்பெஷல் ஷோ : தியேட்டரின் ஒரு மாத வருமானம் அவுட்
இருக்கைகளில் உள்ள பஞ்சு பிய்த்தெறியப்பட்டு, பல நாற்காலிகள் அடித்து உடைக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. மேலும் பல மதுபான பாட்டில்களும் தியேட்டருக்குள் கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஒரு மாதத்திற்கு அந்த தியேட்டரில் இனி படங்கள் திரையிட முடியாது முடியாத நிலை உருவாகி உள்ளது.
அதுமட்டுமல்ல தியேட்டரை மீண்டும் சீர்செய்ய குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் அதற்கு ஒருமாத காலம் பிடிக்கும் என்றும் அந்த தியேட்டர் மேலாளர் சோசியல் மீடியா பக்கத்தில் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். உங்களது மூன்று மணி நேர கொண்டாட்டத்திற்காக எங்களது ஒரு மாத வாழ்வாதாரத்தை அழித்து விட்டீர்களே.. இதைத்தான் உங்கள் ஹீரோ உங்களுக்கு சொல்லித் தந்தாரா என்று ஆதங்கத்துடன் கேள்வியும் எழுப்பியுள்ளார் அந்த நிர்வாகி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!