இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 25ஆம் தேதி வெளியான படம் லைகர். தெலுங்கு - ஹிந்தியில் உருவான இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் டப் செய்தும் வெளியிடப்பட்டது. ஆக்சன் கதையில் உருவான இப்படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டை சனும் நடித்திருந்தார். இதனால் இப்படத்துக்கான எதிர்பார்ப்பும் எகிறி நின்றது. ஆனால் இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் லைகர் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த நிலையில் லைகர் படத்தில் நடிப்பதற்காக 20 கோடி சம்பளம் வாங்கிய விஜய் தேவரகொண்டா 6 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு மீண்டும் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா அடுத்து நடிக்கும் ஜன கன மன என்ற படத்திற்கு இந்த லைகர் படத்தின் தோல்வியினால் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அப்படத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தில் விஜய் தேவரகொண்டா சம்பளமே வாங்காமல் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றால் ஷேர் கொடுக்குமாறு தயாரிப்பாளரிடம் விஜய் தேவரகொண்டா டீல் போட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தற்போது தெலுங்கில் சமந்தாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.




