சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் | மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பிய ஐஸ்வர்யா ராய் |

கமல் - ஷங்கர் கூட்டணியில் கடந்த 27 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் துவக்கப்பட்டாலும் சில பிரச்சனைகள் காரணமாக இடையில் தேக்கம் ஏற்பட்டு, தற்போது மீண்டும் முழுவீச்சுடன் துவங்கப்பட்டுள்ளது.
கதாநாயகிகளாக காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் புதிதாக விவேக் கதாபாத்திரம் இணைக்கப்பட்டு சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஆனால் இடையில் எதிர்பாராதவிதமாக விவேக் காலமானதால் தற்போது அவருக்கு பதிலாக இந்தப் படத்தில் நடிகர் குருசோமசுந்தரம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
அதேப்போல முதல் பாகத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நெடுமுடி வேணுவின் கதாபாத்திரமும் இந்த இரண்டாம் பாகத்தில் தொடர்வதாக உருவாக்கப்பட்டிருந்தது. அவரும் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். இந்தநிலையில் அவரும் சில மாதங்களுக்கு முன்பு காலமானார். அதனால் அவர் நடித்த கதாபாத்திரத்தில் இன்னொரு மலையாள நடிகரான நந்து பொதுவால் என்பவர் நடிக்க இருக்கிறார். மலையாளத்தில் குணசித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ள இவர், கிட்டத்தட்ட மறைந்த நடிகர் நெடுமுடி வேணுவின் சாயலிலேயே இருக்கிறார் என்பதால் இந்த கதாபாத்திரத்திற்கு இவரை தேர்வு செய்துள்ளாராம் ஷங்கர்.




