'சாரக்' படத்திற்கு தணிக்கை சான்று மறுப்பு | ஏ படத்திற்கு 45 இடத்தில் கட் | பிளாஷ்பேக் : கழுகு நடித்த படம் | பிளாஷ்பேக் : திருடனாக நடித்த ஜெமினி கணேசன் | உதய்ப்பூர் சென்றடைந்த திருமண ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | கணவன், மனைவி மோதிக் கொள்ளும் பிப்ரவரி 27 வெளியீடுகள் | 47 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி : எதையும் 'ஷேர்' செய்யாத ரஜினிகாந்த் | தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா |

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்கு மற்றும் ஹிந்திப் படம் 'லைகர்'. தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது.
சுமார் 80 முதல் 85 கோடி வரை இப்படத்திற்கான வியாபாரம் நடந்துள்ளது. குறிப்பாக தெலுங்கில் மட்டும் சுமார் 50 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. ஹிந்தியில் வெறும் 11 கோடி, தமிழில் 2 கோடிதான் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
நேற்று முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் 25 கோடி வரை படம் வசூலித்துள்ளதாம். அதில் 15 கோடி ரூபாய் தெலுங்கு மாநிலங்களில் இருந்து கிடைத்துள்ள தொகை. நேற்றைய வசூலில் மட்டும் 14 கோடி பங்குத் தொகையாக கிடைத்துள்ளதாம். நஷ்டத்திலிருந்து தப்பிக்க இன்னும் 70 கோடி வரை பங்குத் தொகை கிடைக்க வேண்டும். படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள் அதிகம் வந்துள்ளதால் படம் வசூலில் தடுமாறும் என பாலிவுட் வட்டாரங்கள் கூட தெரிவிக்கின்றன. இதனிடையே பட தயாரிப்பு தரப்பில் இருந்து ரூ.33.12 கோடி வசூலித்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இப்படம் பற்றி பல்வேறு விதமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்துமே நெகட்டிவ்வாக மட்டுமே உள்ளது என்பது முக்கியமானது.