ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

ஜிவி பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடித்த பென்சில் படத்தை இயக்கியவர் மணி நாகராஜ். தற்போது இவர் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. சமீபத்தில் இதன் போஸ்டர் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதில் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, நடிகைகள் வனிதா, சீதா மற்றும் லீனா குமார் ஆகியோர் கர்ப்பமாக இருப்பது போன்று அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இயக்குனர் மணி நாகராஜ் மாரடைப்பால் இன்று(ஆக., 25) சென்னையில் காலமானார். அவரின் திடீர் மரணம் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாசுவின் கர்ப்பிணிகள் படக்குழுவினர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மணி நாகராஜ் இயக்குனர் கவுதம் வாசுதேவன் மேனனிடம் காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.




