காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்தது. தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்தான் அதற்குக் காரணம். நீதிமன்ற வழக்கு, தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளைக் கடந்து இப்போது சுமூக முடிவுக்கு வந்துள்ளார்கள். அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாக உள்ளது.
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இதற்காக அரங்கு அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி பரபரப்பாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் கமல்ஹாசன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பிக்கலாம் எனத் தெரிகிறது. அதனால், வேறு ஊர்களில் படப்பிடிப்பை வைத்தால் கமல்ஹாசன் வந்து போக சிக்கலாக இருக்கும் என சென்னையிலேயே அரங்கு அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாக அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிகிறது. வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாதபடி படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம்.




