வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் |

நம் நாடு 75வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமூகவலைதளங்களில் உள்ளவர்கள் ஆக., 2 முதல் தங்களின் முகப்பு போட்டோவாக தேசிய கொடியை வைக்கும் படியும், நாட்டு மக்கள் ஆக., 13 முதல் 15 வரை வீட்டின் முன்பு தேசிய கொடியையும் ஏற்றும்படியும் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்தார். தொடர்ந்து பிரதமரும் தனது சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவை மூவர்ணக் கொடியின் படத்தை வைத்தார். அவரைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களின் முகப்பு போட்டோவில் மூவர்ணக் கொடியை வைத்தனர்.
திரைப்பிரபலங்கள் பலரும் அதை தொடர்ந்தனர். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி கலைஞர்களும் தங்களின் சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவை மாற்றினர். ஆனால் தமிழில் செல்வராகவன் உள்ளிட்ட வெகு சிலரே அப்படி செய்தனர்.
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட கலைஞர்கள் மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவில் தேசிய கொடியை வைத்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்களும் இதை தொடர்ந்து வருகின்றனர். திரையுலகினர் சிலரும் மாற்றி உள்ளனர்.