செப்டம்பரில் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்
ஜூலை 27, 2022
Advertisement
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன்-2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சில விபத்துக்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடந்த ஊரடங்கு உத்தரவு போன்ற சம்பவங்களால் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்துக்குமி டையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றம் வரை சென்றார்கள்.
இதனால் தற்போது ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அதேபோல் கமல்ஹாசன் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்து முடித்து அந்த படமும் வெளியாகிவிட்டது. இப்போது அடுத்த படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் விரைவில் இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராம்சரண் நடிக்கும் படத்தை முடித்ததும் இந்தியன்-2 படவேலைகளில் ஷங்கர் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது. அதனால் தற்போது இந்தியன் 2 படத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள அமெரிக்க சென்றுள்ளார் கமல்ஹாசன். மூன்று வாரங்கள் கழித்து அவர் சென்னை திரும்புவார் என்கிற புதிய தகவல்களும் வெளியாகி உள்ளன.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!