எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் |

தெலுங்கு நடிகர் பிரபாஸ் சக நடிகர், நடிகைகளுக்கு மதிய உணவு அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ஸ்ரத்தா கபூர், திஷா பதானி, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே, பாக்ய ஸ்ரீ, கரீனா கபூர் என பல நடிகைகளுக்கு மதிய உணவு அனுப்பி வைத்ததாக தெரிவித்திருந்தார் பிரபாஸ். இந்த நடிகைகளில் தற்போது திஷா பதானியும் இணைந்துள்ளார். நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் புராஜெக்ட் கே என்ற படத்தில் இவர் நடிக்கிறார்.
திஷா அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சினிமா உலகில் பிரபாஸை போன்று ஒரு மரியாதைக்குரிய அடக்கமான நடிகரை நான் பார்த்ததில்லை. சக நடிகர், நடிகைகளை மிகவும் மதிக்கிறார். எத்தனை உயரத்துக்கு சென்றாலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் எப்போதும் போல் பிரபாஸ் இருப்பது ரொம்ப பிடித்திருக்கிறது. சமீபத்தில் அவர் தனக்கு அனுப்பி வைத்த மதிய உணவும் மிகவும் பிடித்திருந்தது. அதை போல் இந்த ப்ராஜெக்ட் கே படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கும் போது தனது வீட்டு உணவை எனக்கு மட்டுமின்றி மொத்த படக்குழுவுக்கும் வழங்கினார். அந்த வகையில் மற்ற நடிகர், நடிகர்களிடமிருந்து பிரபாஸ் மிகவும் வித்தியாசமானவராக இருக்கிறார் என்று தெரிவித்து இருக்கிறார் திஷா பதானி .