
அடுத்தடுத்து ரிலீஸாகும் பிரபுதேவாவின் படங்கள்
"ஹர ஹர மஹாதேவகி", "இருட்டு அறையில் முரட்டு குத்து", "கஜினிகாந்த்", "இரண்டாம் குத்து" ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார் . இரு ஹீரோயின்கள் நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமாரும், ரைசா வில்சனும் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.
தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆக்ஷன் என்டெர்டெய்னர் ஜானரில் உருவாகி வரும் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து, டிரைலரையும் வெளியிட்டுள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!