பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றியை கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனால் இவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி பிற மொழி நடிகர்களும் இவரது படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இவர் கைவசம் ‛‛விஜய் 67, கைதி 2, விக்ரம் 2'' என அடுத்தடுத்து படங்கள் வைத்துள்ளார். தற்போது விஜய் 67 படத்தை இயக்க அதற்கான பணிகளை துவக்கி உள்ளார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் ‛‛ராம் சரண் உடன் ஒரு படம் பிரமாண்டமாய் உருவாக உள்ளது. தற்போது நாங்கள் இருவருமே இரண்டு, மூன்று படங்கள் கைவசம் வைத்துள்ளோம். அவைகள் முடிந்ததும் நாங்கள் இணைவோம்'' என கூறியுள்ளார்.