வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள புதிய திரைப்படம் "எண்ணித்துணிக". ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் அஞ்சலி நாயர், "சீதக்காதி" பட புகழ் சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசைஅமைத்துள்ளார். சஸ்பென்ஸ் கலந்த ஆக் ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது. சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 4ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!