நடிகை பலாத்கார வழக்கு : திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு | பிளாஷ்பேக்: ஆஸ்தான இயக்குனருக்காக கவுரவ தோற்றத்தில் நடித்த சிவாஜி | அரசியல் படத்தில் அபர்ணதி | ஒரே நேரத்தில் தயாராகும் 2 ஐயப்பன் படங்கள் | 'கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் | இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா |

அஜித் நடித்த ‛கிரீடம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனான இவர் தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, தலைவி உள்ளிட்ட படங்களை இயக்கினார். நடிகை அமலாபாலை திருமணம் செய்து, பின்னர் அவரை விட்டு பிரிந்து விவாகரத்தும் செய்து கொண்டார். அதன் பின்னர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை மணந்தார்.
இந்நிலையில் இயக்குனர் விஜய்யின் தாயாரும், அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை இன்று(ஜூலை 17) காலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். விஜய்யின் சகோதரரான உதயாவும் தமிழில் ‛‛திருநெல்வேலி, தலைவா, ஆவி குமார், உத்தரவு மகாராஜா'' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் விஜய் வீட்டில் நிகழ்ந்த சோகத்திற்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் ஆறுதல் கூறி உள்ளனர்.