ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் சில முக்கிய படங்களை உதயநிதி ஸ்டாலினின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்தான் கைப்பற்றி வருகிறது. நன்றாக ஓடும் என்று தெரிந்த படங்களை மட்டுமே அவர்கள் வாங்கி வருகிறார்கள்.
இந்த வருடத்தில் அவர்கள் வினியோகம் செய்த படங்கள் அனைத்தும் வசூலில் ஏமாற்றவில்லை. அடுத்து 'கோப்ரா, சர்தார், கேப்டன், வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்களை வெளியிட உள்ளார்கள்.
சிம்பு நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தைத்தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் முதன் முதலில் வாங்கி வெளியிட்டது. அதற்குப் பிறகு 12 வருடங்கள் கழித்து சிம்பு நடிக்கும் ஒரு படத்தை மீண்டும் வாங்கி வெளியிடுகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார் சிம்பு.
“12 வருடங்கள் கழித்து மீண்டும் உங்களுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சி அண்ணா,” என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 8ம் தேதி ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' படத்தை வெளியிட்ட ஒரு வாரத்தில் செப்டம்பர் 15ம் தேதி 'வெந்து தணிந்தது காடு' படத்தையும் வெளியிடுகிறது ரெட் ஜெயன்ட்.




