கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு |

சென்னை: திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரம்(56) நலமுடன் வீடு திரும்பினார்.
நடிகர் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன், கோப்ரா' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழா, சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. இந்நிலையில், நேற்று மதியம் விக்ரமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், கடும் காய்ச்சலால், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும் தகவல்கள் பரவின. ஆனால் இதை விக்ரமின் மேலாளர் மறுத்தார். விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அவருக்கு மார்பு பகுதியில் லேசான அசவுகரியம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளார் என்றார். தொடர்ந்து காவேரி மருத்துவமனையும் இதேப்போன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில் விக்ரம் நலம் பெற்று இன்று(ஜூலை 9) மாலை வீடு திரும்பினார். திங்கள் அன்று அவர் நடித்துள்ள கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதில் அவர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




