Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி

05 ஜூலை, 2022 - 10:25 IST
எழுத்தின் அளவு:
Resul-Pookutty-bad-comment-about-RRR-Movie

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் பற்றி மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலரும் 'Gay Movie' என விமர்சித்திருந்தார்கள். முனிஷ் பரத்வாஜ் என்ற இயக்குனர் நேற்று 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி அவரது டுவிட்டரில், “நேற்று இரவு 'ஆர்ஆர்ஆர்' என்ற குப்பையை 30 நிமிடங்கள் பார்த்தேன்” எனப் பதிவிட்டிருந்தார். அதற்கு ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி, 'Gay Love Story' என கமெண்ட் செய்திருந்தார். ரசூலின் இந்த மோசமான கமெண்ட் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் தயாரிப்பாளரான ஷோபு இது குறித்து, “நீங்கள் சொல்வதைப் போல ஆர்ஆர்ஆர் படம் ஒரு 'கே' காதல் கதை அல்ல, அப்படியே இருந்தாலும் 'கே காதல் கதை' என்பது மோசமானதா?, எப்படி நீங்கள் இப்படி சொல்லலாம். உங்களது சாதனைகளில் யாரோ ஒருவர் தாழ்ந்து போனதில் மிகுந்த ஏமாற்றம்” என ரசூலை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ரசூல், “முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன், இருந்தாலும் தவறில்லை. ஏற்கெனவே பொது தளத்தில் இப்படி கேலி செய்யப்படுவதைத்தான் நான் எனது நண்பருக்கு மேற்கோள் காட்டினேன். இதில் வளைந்து கொடுக்க எதுவும் இல்லை. இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ஷோபு. நான் எந்த குற்றத்தையும் அர்த்தப்படுத்தவில்லை. எனது வாதத்தை இத்துடன் முடிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஒரு பொது சமூக வலைத்தளத்தில் ரசூல் பூக்குட்டி 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி இப்படி கமெண்ட் செய்ததற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல்மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ... கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் கதாநாயகியின் ஆடையைத் துவைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

samvijayv - Chennai,இந்தியா
05 ஜூலை, 2022 - 12:58 Report Abuse
samvijayv ரசூல்க்கு ஆர்.ஆர்.ஆர். படத்தில் வாய்ப்பு கொடுத்து இருந்தால், இப்படி பேசி இருக்க மாட்டான். இப்படி பேசி இருக்க மாட்டான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in