
பாரா கிளைடிங்கில் அசத்திய எஸ்தர் அனில்
இந்த நிலையில் ஹலிதா ஷமீம் இயக்கி வரும் மின்மினி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் எஸ்தர் அனில். கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு லடாக்கில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து ஊர் திரும்புவதற்கு முன்னதாக அங்கே பிரபலமான பாரா கிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார் எஸ்தர்.
இது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள எஸ்தர், “ஆகாயம் மேலே.. பாதாளம் கீழே என ஒரு மறக்க முடியாத ஜிலீர் அனுபவமாக இது இருந்தது” என ஆகாயத்தில் பறந்து அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் எஸ்தர் அனில் நடித்த ஜாக் அண்ட் ஜில் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!