‛கேஜிஎப்' இசையமைப்பாளருக்கு 35 லட்சம் மதிப்புள்ள கோல்டு வாட்ச் பரிசளித்த விஸ்வக் சென் | 'சரஸ்வதி' பட விழாவில் தெலுங்கு இயக்குனருக்கு நன்றி சொல்லி கண்ணீர் விட்ட வரலட்சுமி சரத்குமார் | தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடங்கியது: இன்று மாலை ஓட்டு எண்ணிக்கை | எங்க வீட்டுப் பிள்ளை, ஆட்டோகிராப், மாமன் - ஞாயிறு திரைப்படங்கள் | கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு |

தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி , கிர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா ஆகியோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள படம் தி வாரியர். ஆக்சன் கதையில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கில் திரைக்கு வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிரடியான போலீஸ் அதிகாரியாக ராம் பொத்தினேனியும், வில்லனாக ஆதியும் நடித்திருக்கும் அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளும் தெறிக்கவிடும் வகையில் இருப்பதால் இந்த படம் லிங்குசாமிக்கு மீண்டும் திரையுலகில் ஒரு திருப்புமுனை கொடுக்கக்கூடிய படமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




