சென்னையில் வீடு இன்றி தவிக்கிறேன்... நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரி விஜய் மனைவி சங்கீதா மனு | போயஸ் கார்டனில் ரூ.31 கோடிக்கு வீடு வாங்கிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | தெலங்கானாவில் பார்க்கிங் கட்டணம் ரத்து : தமிழகத்திலும் ரத்து செய்யப்படுமா ? | 'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி |

சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு கூட்டணியில் 2003ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛வின்னர்'. இந்த படத்தின் காமெடி பெரிதும் பேசப்பட்டது. இப்போதும் டிவியில் இந்த படத்தின் காமெடியோ அல்லது படமே ஒளிப்பரப்பானாலும் ரசிகர்கள் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு கைப்புள்ளயாக அசத்தியிருந்தார் வடிவேலு. இந்நிலையில் ஹிட் படங்களின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் வேளையில் வின்னர் 2 படமும் உருவாக உள்ளது. இந்த தகவலை நடிகர் பிரசாந்தே வெளியிட்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வழிபட்ட நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛‛எனது ‛அந்தகன்' படம் விரைவில் வெளியாகிறது. அடுத்து ‛வின்னர் 2' உருவாகிறது. முதல்பாகத்தை விட இந்த படம் இன்னும் பிரம்மாண்டமாய் இருக்கும்'' என்றார்.




