மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் | பிளாஷ்பேக்: சிங்கிள் ஷாட் சண்டை காட்சியில் முதலில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: திடீரென காணாமல் போன பேபி உமா | தள்ளிப் போன “ஜனநாயகன், டாக்சிக்” ; 1000 கோடி முடக்கம்? | 'மைதிலி என்னை காதலி' நடிகர் மறைவு: டி.ராஜேந்தர் இரங்கல் | 'கே. சங்கர் 100' : நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் சிற்பிகளில் ஒருவர் |

தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பெனா என்ற படத்தில் வைஷ்ணவ் தேஜ்க்கு ஜோடியாக நடித்தவர் கிருத்தி ஷெட்டி. தற்போது தமிழ், தெலுங்கில் லிங்குசாமி இயக்கி வரும் தி வாரியர் என்ற படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதையடுத்து தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 41வது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் என்ற படத்திலும் கமிட்டாகி உள்ளார் கிருத்தி ஷெட்டி. இந்த படத்தில் பிரியங்கா மோகன் தான் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னை காரணமாக பிரியங்கா மோகன் விலகிக்கொள்ள, இப்போது அந்த வேடத்திற்கு கிருத்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.




