
இந்தியன்-2வுக்கு தயாரா இருங்க; ஒளிப்பதிவாளருக்கு கமல் மெசேஜ்
அந்தவகையில் பிரபல ஒளிப்பதிவாளரான ரத்னவேலு இந்த படத்தை பார்த்துவிட்டு, "கமல் சார் புதிய அவதாரத்தில் அனைத்து சிலிண்டர்களையும் எரிக்க விட்டுள்ளார். லோகேஷ் கனகராஜிடமிருந்து பிரமிக்க வைக்கும் புதுவித ஆக்ஷன் திரில்லர் விக்ரம்" என கமல் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
ரத்னவேலுவின் பாராட்டுக்களுக்கு பதில் அளிக்கும் விதமாக கமலும் உற்சாகமாக, "நீங்களும் உங்களது சிலிண்டர்களை நிரப்பி தயாராக இருங்கள். நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி மீண்டும் விரைவில் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
விக்ரம் படத்திற்கு முன்பாகவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கொரோனா தாக்கம் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு இடையிலேயே நிறுத்தப்பட்டது.
தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கும் என கமல் விக்ரம் பட புரமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். தற்போது ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியின் மூலம் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!