'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக நடித்தவர் பரத். அதன்பின் அவர் நடித்த காதல் படம் திருப்புமுனை தந்தது. தொடர்ந்து என் மகன் படமும் அவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்தது. சமீபகாலமாக அவரின் படங்கள் சரியான போகவில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது பரத்தின் 50வது படமாக உருவாகி வரும் திரைப்படம் 'லவ்'. இதில் வாணி போஜன் பரத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தில் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் . இதை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.




