
பான் இந்தியா.... மருதநாயகம்... - கமலிடம் சிம்பு வேண்டுகோள்
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய நடிகர் சிம்பு : ‛‛கமல் 50 விழா இங்கு தான் நடந்தது. அதில் நானும் பங்கேற்றேன். அந்த விழாவில் பேச நினைத்தேன், ஆனால் நடக்கவில்லை. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தற்காக நன்றி. கமல் சார் எனக்கு ஆன் ஸ்கிரீன் குரு. இன்றைக்கு எல்லோரும் பான் இந்தியா என்று பேசுகிறார்கள். கமல் சார் தயவு செய்து உங்களின் மருதநாயகம் படத்தை ஒரு 5 நிமிடமாவது ரிலீஸ் பண்ணுங்க. அப்போது தான் எல்லோருக்கும் தெரியும் என்றார். அதோடு, விழாவில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து கமலின் பத்தல பத்தல பாடலுக்கு நடமும் ஆடி அசத்தினார்.
விழாவில் பேசிய ராதிகா : ‛‛கமலின் முந்தைய விக்ரம் படத்தில் லிசிக்கு நான் தான் டப்பிங் பேசினேன். எப்படியாவது இந்த விழாவில் கலந்து கொள்ள நினைத்தேன். எப்படி வந்தேன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். தமிழன் ஜெயித்தால் பெரிய மகிழ்ச்சி. இப்போ எங்க பார்த்தாலும் தமிழ் தான். கமல் சாரை நினைத்தால் பெருமையாக உள்ளது"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!