பிளாஷ்பேக்: ஆஸ்தான இயக்குனருக்காக கவுரவ தோற்றத்தில் நடித்த சிவாஜி | அரசியல் படத்தில் அபர்ணதி | ஒரே நேரத்தில் தயாராகும் 2 ஐயப்பன் படங்கள் | 'கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் | இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் |

இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காட்பாதர்'. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிபர்' படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார். இவர்களுடன் மலையாள நடிகர்கள் பிரத்விராஜ், பிஜூ மேனன், நயன்தாரா, 'லிகர்' படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் நடித்து வருகின்றனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் இவர், பிருந்தாவனம், கருப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.