பிளாஷ்பேக்: வாள்வீச்சு நாயகன் ரஞ்சனின் வெள்ளித்திரை வரவுக்கு வித்திட்ட “ரிஷ்யசிருங்கர்” | கவர்ச்சி மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த கயாடு லோஹர்! | 'வாரணாசி' படப்பிடிப்பை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி! | 'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா | குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் | காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் |

உலகமே எதிர்பார்த்து காண துடித்துக் கொண்டிருக்கும் ஒரு படம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தின் இரண்டாம் பாகம். இந்த படத்திற்கு 'அவதார் : தி வே ஆப் வாட்டர்' என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், சிசிஹெச் பவுண்டர், எடி பால்கோ, ஜெமைன் கிளெமென்ட், ஜியோவானி ரிபிசி மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற டிச., 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வரும் மே 6ம் தேதி வெளியாகும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்துடன் அவதார்-2 படத்தின் டிரைலரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவதார்-2 படத்தின் ஒட்டுமொத்த டிரைலரும் இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லீக்கான டிரைலரை உடனடியாக தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி தங்களது சைபர் டீமை வைத்து அத்தனை வீடியோக்களையும் அதிரடியாக நீக்கியது.