சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தொடர்ந்து சத்ரியன், தேவராட்டம், எப்ஐஆர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறா. இவர் குண்டாக இருப்பதை வைத்து பலரும் உருவக் கேலி செய்துள்ளனர்.
இதற்கு, ‛‛எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புகிறோம். சிலருக்கு இயற்கையாகவே உடல் குண்டாக உள்ளது. இதற்கு யாரையும் குறை கூற முடியாது. அதனால் தயவு செய்து ஒருவரின் உருவத்தை வைத்து கேலி செய்வதை நிறுத்துங்கள். நீங்கள் கேலி செய்வதால் அவர்களின் எடைய குறைய போகிறதா. மாறாக அவர்களின் நம்பிக்கை தான் குறையும். என் உடல் எடையை வைத்து என்னை குண்டம்மா, அந்தப் பையன் பாவம் என சிலர் கேலி செய்கிறார். எடை அதிகரிப்பு எனது தனிப்பட்ட விஷயம். இதுபற்றி யாரும் கருத்து கூற வேண்டாம்'' என பதிலடி கொடுத்துள்ளார் மஞ்சிமா மோகன்.