நடிகர்களை போன்று நடிகைகளையும் மதியுங்கள் : அனுஷ்கா கோபம் | கல்வி அறக்கட்டளை தொடங்கும் சிரஞ்சீவி | டிராகன் படத்தின் ஒருநாள் படப்பிடிப்பு செலவு 1.5 கோடியாம் | சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ராஷ்மிகா மந்தனா | துரந்தர் 2 : முதல் நாள் வசூல் எவ்வளவு? | பாலிவுட்டில் அறிமுகமாகும் பாலாஜி மோகன் | சூர்யா 47 படத்தில் ஆக் ஷனில் நஸ்ரியா | ஜெமினி தான் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்திற்கு இன்ஸ்பிரசேன் : சரண் | மக்களின் வாழ்வியல் பிரச்னைகளை பேசும் படங்கள் : யோகிபாபு ஆசை | பிளாஷ்பேக் : பாலிவுட்டை நம்பி கோலிவுட்டை இழந்த நிஷாந்தி |

ரஜினிகாந்த்தின் 169 வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். படப்பிடிப்பை ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை ரம்யாகிருஷ்ணன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த கதாபாத்திரம் கதாநாயகியா அல்லது வில்லியா என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் படையப்பா நீலாம்பரி ஸ்டைலில் நெகட்டிவ் வேடத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.