மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‛ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்" படத்தின் தமிழ் ரீமேக்காக ‛கூகுள் குட்டப்பா" படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மே 6ம் தேதி தியேட்டரில் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!