ஐமேக்ஸில் ஜெயிலர் 2 | ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு | ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி மாற்றம் | 'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் |

இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் புதிய படம் ஒன்றில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் . தி லெஜண்ட்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




