தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் அடுத்து ரஜினி நடிக்கும் 169 ஆவது படத்தை இயக்கப் போகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது குறித்த தகவல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
நெல்சன் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் ரஜினி படம் இயக்குவதற்கு விஜய் தான் காரணம். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது தனது அடுத்த படத்திற்கான கதையை ரஜினி கேட்டு வருவதாக கூறிய விஜய், நீங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது என்று கூறினார். ஆனால் ரஜினி மிகப்பெரிய லெஜண்ட் என்பதால் அவருக்கு எப்படி கதை தயார் செய்வது என்று தயக்கமாக இருந்தது. ஆனால் விஜய் என்னுடைய தயக்கத்தை உடைத்தெறிந்து ரஜினி இடத்தில் கதை சொல்ல வைத்தார். அவர் கொடுத்த தைரியம் நம்பிக்கை காரணமாக தான் இப்போது நான் ரஜினியின் 169வது படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் நெல்சன்.