Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பீஸ்ட்' டிரைலர் ரிலீஸ் : 'பிகில்' சாதனையை முறியடிக்குமா?

31 மார், 2022 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Will-Beast-Trailer-breaks-Bigil-record

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் டிரைலர் நாளை மறுதினம் ஏப்ரல் 2ம் தேதி மாலை 6 மணிக்கு யு டியூபில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே 'பீஸ்ட்' டீசர், டிரைலர் பற்றிய அப்டேட்டுகளை விஜய் ரசிகர்கள் கேட்டு வந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்பட பட நிறுவனம் டிரைலர் பற்றிய அப்டேட்டை வெளியிட்டது.

விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்கு டீசர் மட்டுமே வெளியிடப்பட்டது. 2020 நவம்பரில் வெளியான அந்த டீசர் 72 மில்லியன் பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது. தமிழ்ப் பட டீசர்களில் அதிகப் பார்வைகளைப் பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது. அதற்கடுத்த இரண்டு இடங்களிலும் விஜய் நடித்த படங்கள் தான் உள்ளது. 'மெர்சல்' டீசர் 46 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாவது இடத்திலும், 'சர்க்கார்' டீசர் 45 மில்லியன் பார்வைகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

தமிழ் சினிமா டிரைலர்களில் விஜய் நடித்து வெளிவந்த 'பிகில்' டிரைலர் 56 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. இப்போது 'பீஸ்ட்' டிரைலர் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த டீசர்களில் நம்பர் 1 இடம், டிரைலர்களில் நம்பர் 1 இடம் என்ற சாதனைகள் விஜய் வசம்தான் உள்ளது.

இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமாவின் டீசர், டிரைலர் ஆகியவை 100 மில்லியன் சாதனையைப் படைக்கவில்லை. அந்த சாதனையை 'பீஸ்ட்' டிரைலர் புரியுமா அல்லது 'பிகில்' சாதனையை மட்டும் முறியடிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அஸ்வின் குமாரின் ஆல்பம் பாடலை வெளியிட்ட சிம்பு !!அஸ்வின் குமாரின் ஆல்பம் பாடலை ... கேரள கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்!! கேரள கோவிலில் சாமி தரிசனம் செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

mohan - chennai,இந்தியா
31 மார், 2022 - 15:22 Report Abuse
mohan பாகுபலி 200 மில்லியன் kfg2 250மில்லியன் பார்வைகளை வெறும் ஐந்து நாட்களில் கண்டுள்ளது பீஸ்ட் நுறு தாண்டுவதே பெரிய விசயமா ? விஜய் இன்னும் நறிய வளரணும்
Rate this:
HoneyBee - Chittoir,இந்தியா
31 மார், 2022 - 12:10 Report Abuse
HoneyBee முறியடித்து சாதனை படைத்ததால் இலங்கை தமிழர்கள் உணவுக் கட்டுப்பாடு தீர்ந்தது.. உக்ரைன் போர் முடிவுக்கு வந்தது.. தமிழகத்தில் பாலும் தேனும் பெருகி ஓடுகிறது. வன்கொடுமைகளுக்கு தீர்வாக தூக்கு தண்டனை தரப்பட்டு தமிழகம் அமைதி மாநிலம் ஆகி விட்டது..
Rate this:
mohan - chennai,இந்தியா
31 மார், 2022 - 15:18Report Abuse
mohanஇருக்கிற தமில் நடிகர் ரசிகர்களில் வேலை வெட்டி இல்லாமல் சோம்பறியாக நெட்ட்டில் உங்கர்துந்து தில்லுமுல்லு செய்வதில் வீனா போன விஜய் ரசிகர்கள் முதலிடம் தனது நடிகரின் படத்தை முதல் இடத்தை பிடிக்க இவர்கள் செய்யும் அட்டூழியம் சொல்லிமாளாது இப்படி செய்து இவர்களுக்கு ஒரு அல்ப சந்தோசம் இதில் இவர்கள் எவ்ளவு தில்லு முல்லு செய்து மாஸ்டர் படத்தை விளம்பரம் செய்தாலும் அந்த படம் வசூலில் மொக்கை வாங்கியது அதுது பீஸ்ட் மொக்க அத்தை இவர்கள் எவ்ளவு செலவு செய்தாலும் kfg2 உடன் மோதி சரியான மொக்க வாங்கப்போவது நிச்சயம் ஏற்கனவே கைதியிடம் பீகிள் மொக்கை வாங்கியது போல முடிந்தவரை kfg2... வுடன் பீஸ்ட் மோதாமல் ரிலீஸ் தள்ளி வைப்பது பீஸ்ட் விஜய்க்கு நல்லது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in