சென்னையும்... ‛கப்புள் பிரண்ட்லி' படமும் : இயக்குனர் அஷ்வின் பேட்டி | 'கங்குவா' சாதனையை முறியடிக்குமா 'கமல் ரஜினி ரீ யூனியன்' வீடியோ | தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் | தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் |

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மூப்பில்லா தமிழ் தாயே என்ற இசை ஆல்பம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடலுக்கான வரிகளை கவிஞர் தாமரை எழுதி இருக்கிறார். சைந்தவி பிரகாஷ், கதிஜா ரஹ்மான், பூவையார் உள்ளிட்ட பலர் பாடியுள்ளனர். கடந்த 24ஆம் தேதி துபாயில் நடைபெற்ற எக்ஸ்போவில் இப்பாடல் வெளியிடப்பட்டதை அடுத்து ஏ. ஆர். ரகுமானின் மஜ்ஜா யூடியூப் தளத்தில் இப்பாடல் வெளியானது.
இந்நிலையில் மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இந்த பாடலில் இடம் பெற்றிருக்கும் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ என பாராட்டி இருக்கிறார்.
இவருக்கு பதில் கொடுத்துள்ள ரஹ்மான், ‛‛மிக்க மகிழ்ச்சி. காணொளியில் உங்களுடைய வாகனம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வாகனமாக மூப்பில்லா தமிழ் இருக்கிறது என்றும் சொல்கிறோம். மிக்க நன்றி'' என்றார்.