10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

நடிகர் அஜித், இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் நேர்கொண்டப்பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. அடுத்து அஜித் நடிக்கும் 61 வது படத்தை போனி கபூர் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்தார் . அஜித்தின் 61 வது படம் வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உருவாகிறது.
இந்த படத்தில் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் ஐதராபாத்தில் துவங்க உள்ளது . இந்த படத்தில் அஜித்திற்கு சண்டைக்காட்சிகள் குறைவாக போவதாகவும் கூறப்படுகிறது .




