ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா | 'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்அவுட் | பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் சூட்டி மகிழ்ந்த சிரஞ்சீவி | 'பொன்னியின் செல்வன்' பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு | செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலை |

'ஆர்ஆர்ஆர்' படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே இப்படம் 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. 'பாகுபலி 2' படம் மீதான எதிர்பார்ப்பு வெளியீட்டிற்கு முன்பாக மிக அதிகமாக இருந்தது. ஆனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தைப் பொறுத்தவரையில் அதில் நடித்தவர்களை விட இயக்குனர் ராஜமௌலி மீதுதான் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
'பாகுபலி 2' அளவிற்கு 'ஆர்ஆர்ஆர்' இல்லை என்பது பரவலான கருத்தாக உள்ளது. ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் வட இந்தியாவில் பல ஊர்களுக்குச் சென்று படத்திற்கு புரமோஷன் செய்தார்கள். இருப்பினும் எதிர்பார்த்த அளவிற்கு படத்தின் வசூல் அமையவில்லை என்றுதான் தகவல் வெளிவருகிறது.
ஹிந்தி மார்க்கெட்டில் முதல் நாள் 'ஆர்ஆர்ஆர்' படம் நிகர வசூலாக 20 கோடி வரையில்தான் வசூலித்துள்ளதாம். ஆனால், 'பாகுபலி 2' படம் 40 கோடியை வசூலித்துள்ளது. 'பாகுபலி 2' வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் பாதி அளவு வசூல் மட்டுமே கிடைத்திருப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் வசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். வட இந்தியாவில் படத்திற்கான உண்மையான வரவேற்பு திங்களன்றே தெரியும் என்கிறது பாலிவுட்.