தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா? | எந்த சத்தமும் இல்லாத 'ஜனநாயகன்' | பாலிவுட்டில் கால் பதிக்கும் அனுபமா | மித மிஞ்சிய உழைப்பில் உருவான படம் : விஜய் மில்டன் | 'சாரக்' படத்திற்கு தணிக்கை சான்று மறுப்பு | ஏ படத்திற்கு 45 இடத்தில் கட் | பிளாஷ்பேக் : கழுகு நடித்த படம் | பிளாஷ்பேக் : திருடனாக நடித்த ஜெமினி கணேசன் | உதய்ப்பூர் சென்றடைந்த திருமண ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | கணவன், மனைவி மோதிக் கொள்ளும் பிப்ரவரி 27 வெளியீடுகள் |

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவுக்கு பிறகு அன்கித் திவாரி இசையமைப்பில் முஸாபிர் என்கிற பாடல் விடியோவை சமீபத்தில் இயக்கி வெளியிட்டார் ஐஸ்வர்யா. சமீபத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். மேலும் பாலிவுட்டிலும் புதிய படத்தை இயக்குகிறார். அதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இதனிடையே தனுஷ் - ஐஸ்வர்யாவை சமாதானம் செய்யும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இருவரும் தாங்கள் பிரிவதில் உறுதியாக உள்ளனர். இதுநாள் வரை சமூகவலைதளங்களில் தனது பெயரை ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என்று தான் குறிப்பிட்டு இருந்தார் ஐஸ்வர்யா. ஆனால் இப்போது தனுஷ் பெயரை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார்.