ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

ரெட்டைச் சுழி, நெடுஞ்சாலை, மாயா என பல படங்களில் நடித்துள்ள ஆரி அர்ஜுனன் தற்போது அலேகா, பகவான், நெஞ்சுக்கு நீதி உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். அதோடு பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வென்றார்.
இந்த நிலையில் கள்ளன் படத்தின் விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஆரி அர்ஜுனன், சினிமா விமர்சகரும், ஆன்டி இண்டியன் படத்தின் இயக்குனருமான ப்ளூ சட்டை மாறனை எச்சரித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, மாறன் திரைப்படங்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவர் எங்கிருந்து வந்தார். எப்படி வந்தார் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமார் தன்னுடைய கடினமான உழைப்பினால் உயர்ந்து வெற்றி பெற்றவர். ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இழுத்து வைத்திருப்பவர். அப்படிப்பட்டவரை புரோட்டா மாவு பிசைந்த மாதிரி மூஞ்சி என்று சொல்வதெல்லாம் மிகப்பெரிய வன்மம் என்று கூறி அவரை எச்சரித்திருக்கிறார் ஆரி அர்ஜுனன். அவரது இந்த எதிர்ப்பு செய்தியை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.




