பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது | லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் | மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் ஜோடியாக நடிக்க மறுத்த சந்திரகாந்தா | பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா |

வலிமை படத்தில் சண்டைக் காட்சியில் நடித்தபோது அஜித்தின் கையில் காயம் ஏற்பட்டு அதற்கு மருத்துவர் ஒருவர் மருந்து போட்டு விடும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது வலிமை படப்பிடிப்பு நடைபெற்று வந்த போது ட்ரோன் கேமராவை அஜித் இயக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், வலிமை படப்பிடிப்பு நடைபெற்றபோது சில நாட்களில் அஜித்குமார் ட்ரோன் கேமராவை இயக்கினார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது அதுகுறித்து வீடியோ வெளியாகி இருப்பது அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அஜித்குமாரை பொருத்தவரை பைக் ரேஸ் மட்டுமன்றி படப்பிடிப்புத் தளங்களில் சிறிய ரக விமானங்களை பறக்க விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதையடுத்து தற்போது ட்ரோன் கேமராக்களையும் இயக்க தொடங்கி இருக்கிறார்.