காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் | பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்… |

அனிருத் இசையில் 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்றுள்ள 'அரபிக்குத்து' பாடல் வெளிவந்ததிலிருந்தே பரபரப்பாகியது. அந்தப் பாடலின் வரிகள் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தாலும் பாடலுக்கான இசை சினிமா பிரபலங்களையும் ஆட்டம் போட வைக்கிறது.
இந்தப் பாடலுக்கு நடிகைகள் சமந்தா, பூஜா ஹெக்டே, கனிகா உள்ளிட்டவர்கள் ஏற்கெனவே நடனமாடி குட்டி வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். அந்த வரிசையில் தற்போது ராஷ்மிகா மத்னாவும் சேர்ந்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல ஹீரோவான வருண் தவானுடன் இணைந்து கடற்கரை ஒன்றில் அரபிக்குத்து பாடலுக்காக ஆடிய ஆட்டத்தின் வீடியோவை ராஷ்மிகாவும், வருணும் ஒன்றாகவே பகிர்ந்துள்ளனர். பாலிவுட் வரை அரபிக்குத்து பாடல் சென்றுவிட்டதற்கு விஜய், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்தின் நாயகி ராஷ்மிகா என்று சொல்லப்படுகிறது. அதனால் கூட, ஒரு நட்பிற்காக, ராஷ்மிகா இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டிருக்கலாம்.




