ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

யு டியூப் பிரபலமான பிறகு எந்த நடிகரின் பாடல், டிரைலர், டீசர் அதிகப் பார்வைகளைப் பெறுகிறது. அதிக லைக்குகளைப் பெறுகிறது என ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கத் துவங்கினார்கள். அவர்களுக்கான ஒரு கூடுதல் தகவல்தான் இந்த செய்தி. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அதிகமான 100 மில்லியன் பாடல்களை தன் வசம் வைத்துக் கொண்டு முதலிடத்தில் இருக்கிறார் விஜய்.
நாயகனாக அறிமுகமான காலத்திலிருந்தே விஜய் படங்களின் பாடல்கள் ஹிட்டாவது வழக்கம். அதில் சில பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. கடந்த 30 வருடங்களாக இப்படி பல சூப்பர் ஹிட் பாடல்களை தன் வசனம் வைத்துள்ளவர் விஜய். இந்த யு டியூப் காலத்திலும் அவர்தான் அதிகமான 100 பாடல்களை வைத்திருக்கிறார் என்பதில் ஆச்சரியமில்லை. இந்த விதத்தில் பத்து 100 மில்லியன் பாடல்களைப் பெற்றிருக்கிறார்.
விஜய்க்கு அடுத்து ஐந்து பாடல்களுடன் தனுஷ் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
விஜய்யின் 100 மில்லியன் பாடல்கள், அதிகமான பார்வைகள் வரிசையில்..
1. வாத்தி கம்மிங்… - மாஸ்டர்
2. ஆளப் போறான் தமிழன்… - மெர்சல்
3. அரபிக்குத்து… - பீஸ்ட்
4. வாத்தி கம்மிங் (லிரிக்)... - மாஸ்டர்
5. வெறித்தனம்…- பிகில்
6. என் ஜீவன்… - தெறி
7. ஈனா மீனா டீக்கா…- தெறி
8. செல்பி புள்ள… - கத்தி
9. குட்டி ஸ்டோரி… - மாஸ்டர்
இந்த 9 பாடல்களில் 5 பாடல்களுக்கு அனிருத், தலா 2 பாடல்களுக்கு ஏஆர் ரகுமான், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளனர்.




