சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி | வெற்றி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த் | அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி |

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாலா. வழக்கமான கமர்சியல் படங்களில் இருந்து விலகி மாற்று கதையில் பயணித்து ரசிகர்களை ஈர்க்க வைத்தவர். இன்றைக்கு முன்னணி நடிகர்களாக இருக்கும் விக்ரம், சூர்யா, ஆர்யா உள்ளிட்டோரின் நடிப்பை வெளிக் கொண்டு வந்தவர் பாலா.
கடந்த 2004ம் ஆண்டு தேனியை சேர்ந்த முத்துமலர் என்பவரை பாலா திருமணம் செய்தார். மதுரையில் இவர்களது திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இவர்களுக்குப் பிரார்த்தனா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் பாலாவின் திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் முறையிட்டு இருந்த நிலையில் தற்போது குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உள்ளது.




