தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் யு-டியூப்பில் வெளியாகிறது | 'ஹபீபி' படம் சாத்தியமாக 20 ஆண்டுகள் ஆனது : மீரா கதிரவன் | பிளாஷ்பேக்: இயக்குனராக போராடிய பஞ்சு அருணாசலம் | பிளாஷ்பேக்: அவ்வையாக நடித்த ஆண் நடிகர் | 'தாய் கிழவி' துவங்கும் முன்பே, அடுத்த படத்திற்கும் இயக்குனரை முடிவு செய்த சிவகார்த்திகேயன் | 'ஜனநாயகன்' வினியோகஸ்தர்களுக்கு 'டாக்சிக்' மூலம் 'டானிக்' தரும் தயாரிப்பாளர் | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா 'மெஹந்தி' நிறைவு | நானி இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்திற்கு 'பிளடி ரோமியோ' என டைட்டில் | வாரணாசி : ஜார்ஜியாவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு | ராஜமவுலி, மகேஷ்பாபு சண்டை ; ராம் கோபால் வர்மா பகிர்ந்த வைரல் வீடியோ |

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன், தள்ளிப்போகாதே போன்ற படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். தற்போது காசேதான் கடவுளடா, கிரேட் இந்தியன் கிச்சன் படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த இரு படங்களும் விரைவில் வெளியாக உள்ளன. அடுத்தபடியாக சயின்பிக்சன், பேண்டஸி வகையில் காமெடி ஹாரர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.
ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் நேத்ரா எனும் இளம் அறிவியல் விஞ்ஞானி பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சென்னை ஈசிஆர்-ல் ஒரு பிரமாண்டமான சயின்ஸ் லேப் ஒன்றை பெரும் பொருட்செலவில் அமைக்கிறார்கள். அதோடு படத்தில் தலை சிறந்த அனிமேஷன் கம்பெனியும் பணியாற்ற உள்ளனர்.
படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படம் பூஜையுடன் ஆரம்பமானது. தமிழ் சினிமாவுக்கு புதியதாகவும், ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாகவும் இப்படம் இருக்கும் என்கிறார் கண்ணன்.